fav

Estd. 1924

சென்னை வேதாகம ஐக்கிய சங்கத்தின் எங்கள் அன்புக்குரிய ஸ்தாபகர்

சகோ. சாமுவேல்‌ எபனேசர்‌ ஆண்ட்ரு

1924ம் ஆண்டு திரு. எபனேசர் ஆண்ட்ரூஸ் என்ற சிந்தாதிரிபேட்டை சீயோன் ஆலய அங்கத்தினரால் சென்னை வேதாகம ஐக்கிய சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. சென்னை தபால் தந்தி இலாகாவில் அலுவலராய்ப் பணியாற்றிக்கொண்டிருந்தார். 1917ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி ஆண்டவருடைய மகத்தான இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றார். அதுமுதல் உயிர்த்தெழுந்த ஆண்டவருடைய வல்லமைக்குப் பலத்த சாட்சியாகவும், அநேகருக்கு ஆசீர்வாதத்தின் ஊற்றாகவும் விளங்கினார்.

திருச்சபைக்கு உதவியாகவும், திருச்சபையில் எழுப்புதல் உண்டாகவும் புறமதஸ்தர் மத்தியில் மகிமையின் சுவிசேஷம் அறிவிக்கப்படவும் குருமாரல்லாத சாதாரண சபை மக்கள் செய்யவேண்டிய ஊழியத்தின் அவசியத்தை இவர் ஆழமாக உணர்ந்தார். இதன் அடிப்படையில்தான் இச்சங்கம் 1924ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள பெத்தானி குடில், 1/42A, மவுண்ட் ரோடு என்னும் இடத்தில் ஆங்காங்கேயுள்ள திருச்சபையின் அங்கத்தினர்கள் சிலரைக் கொண்டு, திரு. சாமுவேல் அவர்கள் கௌரவ செயலாளராய்ப் பொறுப்பேற்க, தோற்றுவிக்கப்பட்டது. அவரது தலைமையில் சங்கத்தின் ஊழியம் பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்டது. அநேக நிர்விசாரமானவரும், கர்த்தருடைய நாமம் தரிக்கப்பட்டோரும், புறமதஸ்தர்களும் அற்புதமான இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றனர். அது துவங்கி அவர்களது நேரம், சக்தி, உழைப்பு அனைத்தையும் ஆண்டவருக்காய்ச் செலவிட்டார்கள். தபால் நிலையத்தில் பணிபுரியும்போதும் இயேசு இரட்சிக்கிறார் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற சுவிசேஷ நாடாவை, காண்போர் அனைவரும் வாசிக்கும்படி தன் மார்பின் குறுக்காக அணிந்திருப்பார். அவர் ஆற்றிய அருட்பணியினால் இரட்சிப்பின் அனுபவத்திற்குள் வந்த கிறிஸ்தவர்களும், புற மதத்தாரும் பட்டணத்தில் அநேக கன்வென்ஷன் கூட்டங்களை நடத்தினார்கள். ஆங்கிலோ இந்தியர் நடுவிலும் இந்திய விசுவாசிகள் மத்தியிலும் சிறந்த சேவை செய்து, இளைஞர்களுக்கு ஊழியப் பயிற்சி அளித்தார். இந்த அற்புதமான தேவ மனிதர் மூலம் வேதாகம ஐக்கிய சங்கம் கடந்த 90 ஆண்டுகளாகப் பெற்றுவரும் ஊழிய ஆசீர்வாதங்கள் சொற்கடங்காதவை. இந்தத் தேவ மனிதரின் ஜெப ஜீவியம், திட விசுவாசம், தேவ வார்த்தையை அறிவிப்பதில் அஞ்சா நெஞ்சம், ஆத்தும ஆதாயம் செய்வதில் அர்ப்பணம், ஊழியங்களை ஒருங்கிணைப்பதில் ஆர்வம், அனைத்திற்கும் பரலோகம் சாட்சி பகரும்.

தேவ வசனத்தை உங்களுக்குப் போதித்து, உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள். (எபிரெயர் 13:7).

இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கின்ற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள் (வெளி. 7:10).

ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென். (வெளி. 7:12).

Latest Events